உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

Update: 2025-08-03 12:55 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை மடத்துக்கடை வீதியில் புது அக்ரஹாரத் தெருவிற்கு திரும்பக்கூடிய இடத்தில் உள்ள மின்கம்பமும், முத்துமாரியம்மன் கோவிலுக்கு தெற்குப்பக்கம் உள்ள மின்கம்பமும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து  எலும்புக்கூடாய் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது காற்றடிக்கும் நேரங்களில் மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்