பழுதடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

Update: 2025-07-27 11:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டியில் இருந்து தஞ்சை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் உடையார்தெரு செல்லும் பிரிவு சாலையில் உள்ள மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது.  அதன் அருகிலேயே புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால் புதிய மின்கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்காமல் பழைய மின்கம்பத்தில் இருந்தே மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது பழைய மின்கம்பம் முறிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்