ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-07-20 16:30 GMT

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டதாசனூர் கிராமத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதாகி ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக வெளியே சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அத்துடன் அவசர தேவைக்கு கூட வெளியே சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு மீண்டும் தெருவிளக்குகள் ஒளிர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்