திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, காமராஜர் நகர் திலகர் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் சிதலமடைந்து உள்ளது. இதனை தாங்கி பிடிக்க மற்றொரு மின்கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்கள் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மின்கம்பத்தை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.