ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பூவானி பேட்டை அரசு குழந்தைகள் அங்கன்வாடி அருகே உள்ள சோலார் விளக்கு கடந்த சில வாரங்களாக எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் இவ்வழியே செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சமடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சோலார் விளக்கை சீரமைக்க வேண்டும்.