திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள உயகொண்டான் வாய்க்கால் கரையோரம் செல்பட்டு வரும் நம்ம திருச்சி பூங்காவிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களின் குழந்தைகள் அழைத்து வருகின்றனர். இங்கு குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சிறிய அளவிலான உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு விளக்கு மட்டுமே எரிவதால் அப்பகுதியில் போதுமான வெளிச்சம் இன்றி உள்ளது. இதனால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உடைந்து செயலற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.