மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் முதல் அலங்காநல்லூர் செல்லும் சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் இந்த சாலை இருளில் மூழ்குவதால் எதிரில் வரும் வாகனங்கள் அதிக வெளிச்சத்தில் முகப்பு விளக்கினை எரிய விட்டபடி வருகின்றனர். மேலும் சாலையில் ஆங்காங்கே திருப்பங்கள் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?