அந்தியூர் அருகே மூங்கில்பட்டியில் உள்ள பொன் நகர் கிராமத்தில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்ல பெண்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு பொருத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?