ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-07-06 09:28 GMT

கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பாண்டியாறு குடோனில் இருந்து முன்டக்குன்னு, அட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பகுதிகளில் தெருவிளக்குகள் கடந்த சில மாதங்களாக சரிவர ஒளிருவது இல்லை. இதனால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அந்த பகுதிகளில் இரவில் இருளில் அச்சத்துடன் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருவிளக்குகளை ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்