செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்

Update: 2025-06-22 11:38 GMT

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர்-திருமழப்பாடி சாலையானது முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள கருங்குளத்தை சுற்றிலும் புதர்கள் மண்டி அடர்ந்த காடுபோல் உள்ளது. இந்நிலையில் கருங்குளத்தின் அருகேயுள்ள அனைத்து மின்கம்பங்களிலும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் மின்கம்பமும் துருப்பிடித்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்