ஈரோடு அருகே கணபதிபாளையம் காமராஜபுரத்தில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. அதின் மேல்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் கீழே சாய வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.