அந்தியூர் அருகே கூலிவலசு கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதி காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?