பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2025-06-15 15:13 GMT
விருத்தாசலம் ஜங்சன் சாலை அகலப்படுத்தப்பட்டு இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சாலையின் ஒருபுறம் மட்டுமே மின் விளக்குகள் எரிகின்றன. மறுபுறத்தில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரத்தில் அங்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்