
சென்னை வில்லிவாக்கம், சிட்கோநகர் 30-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்பெட்டி ஆபத்தான நிலையில் திறந்து காணப்படுகிறது. இதில் உள்ள மின்வயர்களில் மின்கசிவு ஏற்பட்டால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், மழைகாலங்களில் மின்விபத்துகள் அதிகரிக்க கூடும். மேலும், குழந்தைகள் விளையாடும் இடம் என்பதால் உடனடியாக மின்வாரிய துறை அதிகாரிகள் மின்பெட்டியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.