விபத்து அபாயம்

Update: 2025-06-01 10:34 GMT

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டுவிளை ஊரில் பெந்தேகொஸ்தே சபையின் அருகில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் இணைப்பட்டுள்ள தெருவிளக்கின் சுவிட்சு பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் சிறுவர்களும், பொதுமக்களும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சுவிட்சை பெட்டியமைத்து பாதுகாப்பான முறையில் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோனி மோசஸ் ,தென்தாமரைகுளம்.

மேலும் செய்திகள்