திருமாணிக்குழி, பெத்தாங்குப்பம், வானமாதேவி உள்பட பல்வேறு கிராமங்களில் முன் அறிவிப்பு இல்லாமல் இரவு வேளைகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் முறையாக மின்விசிறியை ,இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சீரான முறையில் மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.