மதுரை தினமணி நகர் வீரமாமுனிவர் தெருவில் உள்ள மின்கம்பம் சாய்ந்தவாறு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைப்பார்களா?