டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி அம்மன் கோவில் வீதி நூலகம் அருகே ரோட்டோரம் தெருவிளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. தெருவிளக்கை எரியசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.