சென்னை எர்ணாவூர், எர்ணவிஸ்வரன் கோவில் 1-வது குறுக்குத் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள உள்ள மின்பெட்டி ஒன்று ஆபத்தான நிலையில் திறந்து காணப்படுகிறது. இதனால், மழைகாலங்களில் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குழந்தைகள் விளையாடும் இடம் என்பதால் ஆபத்தை உணர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்பெட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.