அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2 மேம்பாலத்தின் குகைவழிப்பாதைகளில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.