குத்தாலம் அருகே உள்ள திருமணஞ்சேரி கோவில் வாசல் மற்றும் கீழத்தெரு உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவிலுக்கு வருபவர்கள், அப்பகுதியை சேர்ந்தவர்கள் பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள், கோவிலுக்கு வருபவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.