சங்கராபுரம் அருகே குளத்தூர் மும்முனை சந்திப்பில் திருவண்ணாமலை- திருக்கோவிலூர் செல்லும் பிரிவு சாலையில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அங்கு வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. எனவே பழுதடைந்த உயர்மின் கோபுர விளக்கை விரைந்து சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டியது அவசியம்.