அரியலூர் மாவட்டம் முனியங்குறிச்சி, மு.புத்தூர் கிராமங்களின் வழியாக தினமும் பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்கள் மூலம் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புகின்றனர். இந்நிலையில் மு.புத்தூர் கிராமத்தில் சுடுகாடு செல்லும் பிரிவு சாலையில் இருந்து சின்னேரி நுழைவாயில் வரை சாலையின் இடது புறத்தில் 5 மின்கம்பங்கள் உள்ளது. இதில் மின் கம்பங்களில் தெருவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகள் இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் முதியவர்கள் செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் அவை பொதுமக்களை கடிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.