தூத்துக்குடி ராஜீவ்நகர் மேற்கு பகுதியில் கோக்கூர் பிரதான சாலையில் உள்ள 2 மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பழுதடைந்ததால் அதனை அகற்றினார்கள். பின்னர் புதிய தெருவிளக்குகளை பொருத்தாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே இரவில் தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.