செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் குரோம்பேட்டை 8-வது குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், சாய்து மேலே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி மின்வாரிய துறை அதிகாரிகள் புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.