திருவள்ளூர் மாவட்டம் பெரியகளக்காட்டூர், சின்னகளக்காட்டூர் கிராமத்தில் உள்ள ரையிஸ் மில் தெருவில் உள்ள ஏராளமான மின்கம்பங்கள் உள்ளது. இதில் சில மின்கம்பங்கள் ஆங்காங்கே உடைந்து சிதலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.