புவனகிரி அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்து வந்தது. இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உருவானது. இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து பழுதடைந்த மின்விளக்குகளை அதிகாரிகள் சரிசெய்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.