திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தெற்குச் சித்திரை வீதி சந்திலிருந்து வெளி ஆண்டாள் சன்னதி செல்லும் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் முன்பு இரும்பு மின் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இதன் அடிப்பகுதி சேதம் அடைந்து, தற்போது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் காணப்படும் மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.