ஆசாரிபள்ளம் சந்திப்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன் பகுதியில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தால் சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.