கோவையை அடுத்த மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அன்றாட பணிகளை கூட கவனிக்க முடியவில்லை. இதன் காரணமாக இல்லத்தரசிகள் மட்டுமின்றி மாணவர்கள், வியாபாரிகள் உள்பட பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.