திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஆவடி பைபாஸ் பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால் மின் சாதனங்கள் சேதமடைகிறது. மேலும், கோடைகாலம் என்பதால் இரவு நேரங்களில் குழந்தைகள் சரியாக தூங்கவும் முடியவில்லை. எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சினையை சரிசெய்யவேண்டும்.