கோபிசெட்டிபாளையம் வடக்கு பார்க் வீதியில் உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றார்கள். இதுதவிர போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே தெருவிளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.