ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-04-27 13:48 GMT

புஞ்சைபுளியம்பட்டி நல்லூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் பெருமாள் கோவில் பகுதியில் மின் கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. சிறுவர், சிறுமிகள் தெரியாமல் தொடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் கீழே முறிந்து விடும் நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்