எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2025-04-27 11:48 GMT

சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உள்ள மீன்சுருட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளதால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்