வெப்பிலியில் இருந்து சின்னசாமிபுரம் செல்லும் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் மேல் பகுதி வரை கொடிகள் சுற்றி காணப்படுகின்றன. இதனால் வேகமாக காற்று வீசும்போது மின்வினியோகம் தடைபடுகிறது. மேலும் மழை பெய்யும்போது கொடிகள் சுற்றிய இந்த மின்கம்பத்தை யாராவது தெரியாமல் தொட்டுவிட்டால் மின்சாரம் தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் கம்பத்தை சுற்றியுள்ள கொடிகளை அகற்ற வேண்டும்.