ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் 9-வது வார்டு மற்றும் 12-வது வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த அளவு அழுத்தத்துடன் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள மின்சாதனங்கள் பழுதாகும் நிலை உள்ளது. எனவே குறைந்த மின்னழுத்த பிரச்சினையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.