சென்னை திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் 33-வது குறுக்கு தெருவில் உள்ள மின்பெட்டி ஆபத்தான முறையில் திறந்து, சாய்ந்து கிடக்கிறது. இதனால் மழை நேரங்களில் மின்விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன்கருதி, மின்வாரிய அதிகாரிகள் மின்பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.