ஆபத்தான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2025-04-20 09:47 GMT
திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகரில் சுப்பிரமணியர்நகர் தண்ணீர் டேங்க் அருகே உள்ள மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் காட்சிஅளிக்கின்றன. எந்நேரமும் சாய்ந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் மாலை நேரங்களில் அந்த பகுதியில் விளையாடுவார்கள். ஆகவே ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்