கரூர் திருக்காம்புலியூரில் சேலத்தில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் டவுன் பிரிவு ரோட்டில் மின்கம்பம் ஒன்று அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இப்போ விழுமோ, எப்போ விழுமோ என்ற அபாயத்தில் உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால், ஏதாவது அசம்பாவித நடைபெறும் முன்பு அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.