டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி எதிரே சத்தியமங்கலம்- அத்தாணி ரோட்டில் சோலார் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இதனால் மாலை, இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது சரியாக தெரியாததால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் அருகிலேயே பஸ் நிறுத்தம் உள்ளது. வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாலை நேரங்களில் ஊருக்குள் வருவதற்கு சோலார் மின் கம்பம் அமைந்துள்ள இந்த பஸ் நிறுத்தம் தான் மையமாக உள்ளது. எனவே பழுதான சோலார் மின்விளக்கை சரி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
