தியாகதுருகத்தில் இருந்து புக்குளம் செல்லும் சாலையில் ஏரிக்கரை பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.