மின்விளக்கு எரியவில்லை

Update: 2025-04-13 14:37 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகில் பிரதான சாலை உள்ளது. எனவே, ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளியின் நுழைவுவாயிலில் உள்ள மின்விளக்கு ஏரியாமால் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதன்காரணமாக, அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்