எரியாத மின்விளக்கு

Update: 2025-04-13 14:26 GMT

திருவள்ளூர் மாவட்டம், காரனோடை பைபாஸ் முதல் தச்சூர் கூட்ரோடு வரை செல்லும் சாலையை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் இருக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்