திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், நியூ சன்சிட்டி ஆங்காடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சில மின்கம்பங்கள் சரிந்த நிலையில் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் இருப்பதால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்கம்பத்தை சரிசெய்ய மின்வாரியதுறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.