மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2025-04-13 10:16 GMT
கரூரிலிருந்து தாந்தோன்றிமலை, வெள்ளியணை, பாளையம் வழியாக திண்டுக்கல்லுக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த மாநில நெடுஞ்சாலை செல்லும் வழியில் வெங்ககல்பட்டி அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை குறுக்கிடுகிறது.அப்படி குறுக்கிடும் பகுதியில் இரண்டு சாலைகளிலும் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும் அணுகு சாலையில் இருந்து வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டதை கருத்தில் கொண்டு தற்போது இருபுறமும் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரவுண்டானாபகுதியில் சாலையும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ள பகுதியில் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் தரும் வகையில் மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் அணுகு சாலையில் இருந்து ரவுண்டானாவை சுற்றி செல்ல வரும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே ரவுண்டானா பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்