தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் இருந்து பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து உடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது. இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த கிராமமக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.