கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் இணைப்பு சாலையில் இருந்து மடம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மின்கம்பியில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.