மின் கம்பிகளில் உரசும் கருவேல மரங்கள்

Update: 2025-04-06 12:03 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வரகூர் பழைய காலனி தெருவில் சாலையோரத்தில் ஏராளமான கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இவை சாலையோரம் செல்லும் மின் கம்பிகள் மீது உரசுவதினால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த மரங்களின் அருகே செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் மீது மின்சாரம் பாய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்