ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-03-30 17:36 GMT
தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் ஏரிக்கரை பகுதியில் உள்ள மின் கம்பம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கம்பத்தின் உச்சியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்