சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாங்குடி சின்னகருப்பர் கோவில் முன்புள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சிறுவர்-சிறுமிகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.